7 ஆண்களை கொன்ற பாலியல் தொழிலாளி! பிளாஷ்பேக்!!

1009

புளோரிடாவை சேர்ந்த Aileen Wuornos என்ற பெண்மணி உலகிலேயே மோசமான சீரியல் கில்லர் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.இவர் செய்த கொலைகளை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது என்றால், அந்த அளவுக்கு இவர் மக்கள் மத்தியில் கொடூர ரூபத்தில் வலம் வந்திருக்கிறார் என தெரிகிறது.

இவர் இவ்வாறு செய்தவதற்கு சிறு வயதில் இவர் வளர்ந்த முறைகளும், இவருக்கு நேர்ந்த கொடுமைகளுமே காரணம்.1956 ஆம் ஆண்டு பிறந்த ஆய்லனின் தந்தை குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் வைத்து தற்கொலைசெய்துகொண்டார்.

ஆய்லனின் தாய், அவரை தாத்தா பாட்டியின் பொறுப்பில் விட்டு சென்றுவிட்டார். சிறுமியாக இருந்தபோதே ஆய்லனை அவரது தாத்தா கற்பழித்துள்ளார்.

இப்படி சிறு வயதில் நரக வாழ்க்கையை வாழ்ந்த இவருக்கு, எதிர்கால வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. புளோரிடா மாகாணத்தில் பாலியல் தொழிலாளியாக வலம் வந்தார்.

அந்த தொழிலில் இவரை ஏமாற்றினால் அவர்களை கொலை செய்துவிடுவார். இப்படி 1989 முதல் 1990 வரை 1 ஆண்டில் மட்டும் புளோரிடா நெடுஞ்சாலையில் வைத்து தனது துப்பாக்கியால் 7 ஆண்களை கொலை செய்துள்ளார்.

இக்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட இவரை, 2002 ஆம் ஆண்டு lethal ஊசி மூலம் சிறையில் வைத்து மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.