7000 விஐபிகள்,100 கோடி செலவில் நடத்தப்பட்ட திருமணம் : 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு நிற்கும் பிரபலத்தின் மகன்!!

1018

லாலுவின் மகன் திருமணம்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் திருமணம் 100 கோடி ரூபாய் செலவில் செய்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது விவாகரத்தில் வந்து நிற்பதால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா ராயின் திருமணம் கடந்த மே மாதம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. ஐஸ்வர்யா பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராயின் பேத்தி ஆவர்.

இவர்களது திருமணம் பாட்னாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஊரே வியக்கும் அளவிற்கு நடைபெற்றது. மகனில் திருமணத்தில் கலந்துக் கொள்ள ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் லாலு பிரசாத 3 நாட்கள் பரோலில் வெளி வந்து திருமணத்தை சிறப்பாக நடத்திவைத்துவிட்டு சென்றார்.

ஜெயிலில் இருந்த லாலுபிரசாத் தேஜ் பிரதாப் – ஐஸ்வர்யாவின் திருமணம் இப்படி தான் பிரம்மாண்டமாக நடைப்பெற வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் 7000 ஆயிரம் விஜபிக்கள் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி 50 வகையான சாப்பாடு, ஃபை ஸ்டார் ஹோட்டல் என்று திருமணம் பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடந்து முடிந்தது.

அதன் பிறகு, தனது மனைவியை தேஜ் முதன்முறையாக சைக்கிளில் வெளியே அழைத்துச் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட திருமணம், தேஜ் முதன்முறையாக தன் மனைவியை சைக்கிளில் அழைத்துச் சென்றது அப்போது ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படி பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடந்த திருமணத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திருமணமாகி 6 மாத காலத்திற்குள் தேஜ் யாதவ் விவாகரத்து கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் புயலை கிளப்பியுள்ளது.தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த விவரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தேஜ் பிரதாப் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவியைக் காண தேஜ் பிரதாபின் வீட்டிற்கு சென்றனர்.

இதற்கிடையே விஷயத்தை கேள்விப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உரே வியக்கும் அளவிற்கு லலு பிரசாத் தேஜ் – ஐஸ்வர்யா திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால் 6 மாதத்தில் தேஜ் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் ஏறி இருப்பது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.