ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிக்கு மெழுகுசிலை வைத்த ரசிகர்கள்! ஆனால் காலாவுக்கு அல்ல!

78

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்துள்ள காலா படம் கடந்த ஜுன் 7ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையின் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகு சிலையை அவரது ரசிகர்கள் காலா ரிலீசான 7ம் தேதி வைத்துள்ளனர்.

55 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் வைத்துள்ள இந்த சிலை காலா போல இல்லை படையப்பா ரஜினி போன்று உருவாக்கியுள்ளனர். ரசிகர்கள் அந்த சிலை முன்பு புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.