ஹவாய் தீவில் தெருவுக்கு வந்த செல்வந்தர்கள்!

530

ஹவாய் தீவின் Kilauea எரிமலை வெடித்ததால் வீடுகளை இழந்த பல செல்வந்தர்கள் இன்று ஆங்காங்கே கூடாரங்களில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நிலையில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்று தங்கள் வீடுகளை இழந்து Pahoa என்னும் பகுதியில் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ள கூடாரங்களில் வாழும் ஒரு நிலையை எரிமலைக் குழம்பு ஏற்படுத்தியுள்ளது.

Zelda Kanakaoleம், 15 பேர் அடங்கிய அவரது குடும்பமும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நான்கு வாகனங்களின் கீழ் வாழ்கிறார்கள்.பிள்ளைகள் காருக்குள் உறங்க பெரியவர்கள், கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வந்ததிலிருந்தே இப்படிதான் அவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முயன்றதாகவும், திடீரென்று வீட்டு உரிமையாளர் வீட்டு வாடகையை மாதத்திற்கு 1,100 டொலர்களிலிருந்து 1,900 டொலர்களாக உயர்த்தி விட்டதால் அந்த திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் Zelda Kanakaole குடும்பத்தினர்.

வெள்ளிக்கிழமை கணக்குப்படி இதுவரை 600 வீடுகள் அழிந்து போனதாக தெரிவித்துள்ள அமெரிக்க நிலவியல் துறை அதிகாரிகள், எப்போது எரிமலைக் குழம்பு நிற்கும் என்றோ எப்போது புதிய வெடிப்புகள் ஏற்படும் என்றோ கூற இயலவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.