72 வயதில் பெரியார் தனது மகள் வயது பெண்ணை ஏன் திருமணம் செய்தார் தெரியுமா?

575

சமூக போராளியான தந்தை பெரியாரின் முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயதிருக்கும் போதே இறந்துவிட்டார்.அந்த காலக்கட்டதிலேயே உறவினர், நண்பர்கள் என பலர் பெரியாரை மறுமணம் செய்துக் கொள்ள கூறிய போது முழுமனதுடன் மறுப்பு தெரிவித்திருந்தார் பெரியார்.

ஏனெனில் தனது மீத வாழ்க்கை மற்றும் அதில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் நிச்சயம் தனது துணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெகுவாக அறிந்திருந்தார் பெரியார்.

ஆனால் பின்னர் தனது 72வது வயதில் 26 வயது மணியம்மையை பெரியார் மணக்க காரணம் என்ன?எழுபதுகளில் முதியவர்களுக்கு என்னென்ன உடல்நல குறைபாடுகள் ஏற்படுமோ அவையெல்லாம் பெரியாருக்கும் ஏற்பட்டது.

அந்நாள் வரை தன் இயக்கம், கொள்கைகள், போராட்டங்கள் குறித்து மட்டுமே கவனம் கொண்டிருந்த பெரியாருக்கு, தனக்கு பின் யார், யார் அனைத்தையும் வழிநடுத்தி செல்வார்கள் என்ற எண்ணம் அப்போது தான் பிறக்க துவங்கியது.

தனது மரணத்திற்கு பிறகு தனது சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம் என பெரியாரின் மனதை சூழ்ந்திருந்தன.இதையடுத்து தனது சொத்துக்களை தனது கட்சிக்கு எழுதி வைக்க முடிவெடுத்த அவர் உடனடியாக தனது வழக்கறிஞரை வரவழைத்து கோப்புகள் ஏற்பாடு செய்ய கூறினார்.

அப்போது தான் பெரியாருக்கு பிறகு அவரது இரத்த பந்தத்திற்கு தான் சொத்து போகும். அவர்களது கையொப்பம் இருந்தால் தான் சொத்துகளை கழகத்தின் பெயருக்கு மாற்ற முடியும் என்று வழக்கறிஞர் கூறினார்.

ஆகவே, ஒன்று பெரியார் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் கழகத்திற்கு சொத்து எழுதி வைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

இதற்காகவே பெரியார் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், அவர் வீட்டு பணிப்பெண்ணான மணியம்மை, நான் தானே பெரியாரை கவனித்து வருகிறேன். இது வெறும் சட்டத்திற்கான பதிவு மட்டும் தானே. அதைத்தாண்டி எங்கள் உறவானது எப்போதுமே போல தானே தொடர போகிறது என்று கூறி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் மணியம்மை.

இதையடுத்து சென்னை தியாகராயநகரில் செ.தெ.நாயகம் இல்லத்தில் ஏப்ரல் 9, 1949 அன்று பெரியாருக்கும் மணியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது.