பாலியல் புகாரளித்த பிரபல தமிழ்திரைப்பட நடிகையின் தந்தை மரணம்!!

131

பிரபல நடிகை முன்முன் தத்தாவின் தந்தை உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை முன்முன் தத்தா.

இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.சிறுவயதில் தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் குறித்து முன்முன் கடந்தாண்டு ஊடகத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்முன்னின் தந்தை சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்திருந்தது.

ஆனாலும் நோய் பாதிப்பிலிருந்து மீளாத அவர் திடீரென நேற்று மரணமடைந்தார்.தந்தையின் மரணம் குறித்து அதிகம் கேட்க வேண்டாம் எனவும், தன்னை தனிமையில் விடும்படியும் முன்முன் கோரிக்கை வைத்துள்ளார்.