நடிகை மனிஷா கொய்ராலா வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவம்!!

262

ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் என சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு படமான ‘சஞ்சு’-வில் நடித்தார்.

இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் இவர் நடித்ததற்கு ஒரு ஒற்றுமை உள்ளது.

நர்கீஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். மனிஷாவும் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து சில ஆண்டுகள் போராடி மீண்டு வந்தார். எனவே, தனது வாழ்வில் புற்றுநோயினால் ஏற்பட்ட சோகம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உண்மையில் நீங்கள் திரைப்படங்களில் கண்டு ரசிக்கும் அத்தகைய உண்மையான காதலை நான் என் நிஜ வாழ்வில் காணவில்லை.

திருமணம் என்ற பந்தத்தின் பெயரால் காதலையும், அன்பையும், மரியாதையையும் எதிர்பார்த்து நான் ஏமாந்து விட்டேன். என்னால் பந்தத்தின் பெயரால் சுயமரியாதையை இழந்து வாழ முடியாது.

எனக்கான மரியாதை மிக முக்கியம். திரைவாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, மரியாதையற்ற இடத்திலோ, உறவிலோ என்னால் இருக்கவே முடியாது.

அப்படிப்பட்ட உறவு எனக்கு தேவையில்லை என்பதே, என் வாழ்வில் நான் கண்டடைந்த மிக மோசமான உண்மை’ என தெரிவித்துள்ளார்.