ஸ்ரீரெட்டியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நடிகர்…யார் தெரியுமா?

236

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் நானி சட்டரீதியாக நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகர்களின் உறவினர்கள் என்று அனைவரும், பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன், ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், இதில், நடிகர் நானியின் பெயரும் அடிபட்டது. நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என்றும் அவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த நிலையில், தற்போது நானி நடத்தும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியின் பெயரும் அடிபட்டது. அதற்காக அவரும் முயற்சித்து வந்தார்.

இதையடுத்து, தற்போது, பாதியில் எண்ட்ரி ஆகயிருப்பதாகவும் தகவல் தெரிவித்தது. இதற்கிடையில், கடந்த 10ம் தேதி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் ஸ்ரீ ரெட்டியும் பாதியில் எண்ட்ரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, தொடர்ந்து நானிக்கு சிக்கலாக வரும் ஸ்ரீரெட்டி தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று நடிகர் நானி தனது வழக்கறிஞர் மூலம் ஸ்ரீ ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன்னை குற்றம்சாட்டுவது தவறு. இந்த பொய்யான செய்தியால், பெயர் மற்றும் சினிமா வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக, தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.