ஆண்கள் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

1381

பேரிச்சம்…

பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. முக்கியமாக அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்னை, இதய சம்மந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் உடலுக்கு ஊக்கம் அளித்து பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் அம்சமாய் பேரிச்சம் பழம் உள்ளது.

ஆண்கள் தினமும் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்:-

  • உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் பாலுடன் சேர்த்து பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இதில் அமினோ அமிலம் உள்ளதால் கரையாத கொழுப்புகளையும் கரைத்து உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும் மற்றும் செரிமான பிரச்னையையும் அறவே நீக்குகிறது.

  • மலசிக்கல் உள்ளவர்கள் தினமும் இரவு பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தண்ணீருடன் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கலில் இருந்து முழுமையாக விடிவு பெறலாம். இந்த பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் நரம்பு மண்டலங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
  • பேரிச்சம் பழத்தில் கொழுப்பு குறைவாக தான் உள்ளது. இதனால் ஆண்கள் இதனை பயப்படாமல் தினமும் எடுத்து கொள்ளலாம். இதில் ஏகப்பட்ட விட்டமின்கள் வகைகள், புரோட்டீன்கள் என பல ஊட்டச்சத்துக்கள் மலை போன்று குவிந்துள்ளது.

  • சில ஆண்கள் போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர மிகவும் கஷ்ப்படுகிறார்கள். அவர்கள் தினமும் தவறாமல் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
  • பேரிச்சம் பழத்தில் பெரிய பெரிய நோய்களை அழிக்கும் சக்தி உள்ளது. இதனை தவறாமல் தினமும் 2-3 பழத்தை எடுத்துக்கொள்வதால் சிறுநீரக புற்று மற்றும் குடல் புற்று நோய்களில் இருந்து பாதுக்காக்கிறது.
  • இதில் உடலுக்கு தேவையான அளவு சோடியம் கிடைப்பதால் பக்கவாதம் வருவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.