மாதம் முழுவதும் கதறி அழும் மணப்பெண்…. இந்த கொடுமை எங்கே தெரியுமா?

630

திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இரண்டு வெவ்வேறு குடும்பத்தில் இருந்து மணப்பெண், மணமகன் இணைந்து ஒரு புதிய இல்வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் இருந்து வாழ்நாள் முழுக்க அவர்கள் இருவரும் மகிழ்ச்சி நிறைந்து, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள்.

பொதுவாக மணப்பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்கு செல்லும் போது, பெண்ணின் உறவினர், அம்மா, அப்பா போன்றவர்கள் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.

இந்த ஒரு காரியம் மட்டும் தான் திருமண நிகழ்வில் நடுவே கொஞ்சம் சோகமானதாக இருக்கும். ஆனால், எங்காவது திருமண பெண்ணை வாரம் முழுக்க அழவிட்டு வேடிக்கை பார்த்து, என்ன என்ற கேட்டால்… இது திருமண சடங்கு என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதோ! உலகின் வினோத தேசமான சீனா… உங்களுக்கு மற்றுமொரு வினோதத்தை கற்றுக் கொடுக்கிறது.. அது தான் அவர்களது தனித்துவமான திருமண சடங்குகள்…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் தான் ஜுவா டங் எனப்படும் இந்த விசித்திரமான திருமண சடங்க பின்பற்றப்பட்டு வருவதை காண முடிகிறது.

இந்த சடங்கின் போது, திருமண பெண், திருமண தேதியில் இருந்து சரியாக ஒரு மாத காலம் அழ வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. எல்லா நாளும் இரவு ஒரு மணி நேரம் அழ வேண்டும் என்று கூறுகிறார்கள்.

முதல் பத்து நாட்களில் மணப்பெண் மட்டும் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து அழுவார். பிறகு பத்து நாட்கள் கழித்து, மணப்பெண்ணுடன் அவரது அம்மாவும் சேர்ந்து உட்கார்ந்து அழுவார்.

அடுத்த பத்து நாட்கள் கழுத்து மணப்பெண்ணின் பாட்டியும் உடன் அமர்ந்து அழுவார். கடைசியாக அத ஒரு மாத காலம் முடிவடையும் போது உறவினர்களில் இருக்கும் அணைத்து பெண்களும் சேர்ந்து அழுவார்கள்.

அழுவார்கள் என்றாகள் ஒப்பாரி வைப்பது போல சத்தமிடுவது, கண்ணை கசக்கி கொண்டு அமர்ந்திருப்பது என்பபது போல அல்ல. அழுவதற்கு என தனி இடம் இருக்கிறது. அங்கே சென்று தான் அழுகிறார்கள்.

மேலும், அழும் போது அதற்கென தனி பாடல்கள் இருக்கின்றன. அதை பாடிக் கொண்டே தான் மணப்பெண்ணின் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அழுகிறார்கள். ஒரு ரொமாண்டிக்கான நிகழ்வை… இப்படியொரு சடங்கை வைத்து அழ வைத்துவிட்டார்களே….