இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும்! எப்படி தெரியுமா?

1059

இந்தியர்கள் எப்போதும் வாய்க்கு சுவையாகத் தான் சாப்பிட விரும்புவார்கள். இதற்காக உண்ணும் உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

இந்த மசாலா பொருட்களால் உணவுகளின் ருசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அதில் ஏராளமான மருத்துவ பண்புகளைத் தன்னுள் கொண்ட ஓர் பொருள் தான் சீரகம்.

சீரகம் எகிப்துக்கு சொந்தமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு, இந்தியா, சீனா மற்றும் மத்திய தரை நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது.

நமது வரலாற்றில், சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.
எப்படியெல்லாம் சீரகத்தை உணவில் சேர்க்கலாம்?

சீரகத்தை பொடி செய்து சூப், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மீது தூவி சாப்பிடலாம்.
பொரியல் செய்வதற்கு தாளிக்கும் போது, அத்துடன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு, அந்நீரைக் குடிக்கலாம்.
தயிர் சாப்பிடும் போது, அத்துடன் சீரகப் பொடியைத் தூவி சாப்பிடலாம்.