ரஜினி தங்கியதற்காக ஹொட்டல் பெயரையே மாற்றிய உரிமையாளர்!!

710

டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, அங்குள்ள அலிட்டா ஹொட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் 10 நாள்கள் ரஜினி தங்கியதற்கு அதன் பெயரை மாற்றியுள்ளார் ஹொட்டல் உரிமையாளர்.

ரஜினி தங்கியதை தொடர்ந்து அந்த ரிசார்ட்டின் பெயர் `ரஜினிவில்லா #3′ என மாற்றப்பட்டுள்ளது.மேலும் `ரஜினிவில்லா #3′ என்ற பெயர் பலகையுடன் ஹொட்டல் உரிமையாளர் ரஜினியுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய ஹொட்டல் உரிமையாளர், `ஒரு சிறந்த மனிதர் எங்கள் ஹொட்டலில் தங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அன்பைக் காண்பிக்கவே ஹொட்டல் பெயரை மாற்றம் செய்தோம் என தெரிவித்தார். இதேபோல், டார்ஜிலிங்கில் தங்கியிருக்கும் போது ரஜினி டீ குடித்த கடைக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சாய் டீ பார் லவுஞ்சுக்கு பதிலாகத் `தலைவா ஸ்பெஷல்’ என மாற்றப்பட்டுள்ளது.