8வது மாடிக்கு சென்ற இளம்பெண் : அடுத்து செய்த செயல் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

698

இளம்பெண்

இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர் மனைவி பிரஜக்டா (33). தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவர்.

இருவரும் அங்குள்ள எட்டு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரஜக்டா நேற்று நைட்டி உடையில் தனது வீட்டிலிருந்து வெளியில் வந்து லிப்டில் ஏறி எட்டாவது மாடிக்கு ஏறினார். பின்னர் அங்கிருந்து அவர் கீழே விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உடல் சிதறியது. இந்த காட்சிகள் அங்குள்ள கமெராவில் பதிவானது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனையில் பிரஜக்டாவின் உள்ளுருப்புகள் அனைத்தும் சேதமடைந்ததும், வெளி உடலில் படுகாயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது இதையடுத்து இது தற்கொலையாக இருக்கலாம் என கூறும் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையால் பிரஜக்டா இம்முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், பிரனவும், பிரஜக்டாவும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தார்கள். அவர்கள் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததேயில்லை என கூறியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.