8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ கொலையாளி இறுதியில் போலீசாரிடம் பிடிபட்டான்.
பெங்களூரு அருகே உள்ள யக்ஷந்த்புர் மற்றும் பீன்பூர் ஆகிய இடங்களில் இளம்பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதே முறையில் மேலும் சில பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் இதற்கு பின்னணியில் சைக்கோ கொலையாளி யாரவது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அக்கம்பக்கதினர் கூறியதை வைத்தும் , சிசிடிவி கேமராவில் தென்பட்ட காட்சிகளை வைத்தும் குற்றவாளியை பிடிக்க போலீசார் முயன்றனர்.
இறுதியாக குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக கைது செய்யாமல் அவனது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
கடந்த 28ஆம் தேதி அன்று பெங்களூரு புறநகர் பகுதியில் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவனது பெயர் துரை என்றும் கோவையை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுவரை 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நிலையில் இன்னும் எத்தனை பேரை அவன் இப்படி கொன்றிருக்கிறான் எந்தெந்த ஊர்களில் இது போல கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்றும் போலீசார் அவனை விசாரித்து வருகின்றனர்.
விசாரணையை தொடர்ந்து பெங்களூரு மற்றும் கர்நாடக உள்புற மாவட்டங்களில் இது போன்ற கொலைகளை செய்ததாக அவன் ஒப்பு கொண்டிருக்கிறான். மேலும் விசாரணை தொடர்கிறது.