8 வருட காதல் : திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

662

8 வருட காதல்

விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் குடியேறினர்.

மீனா அசோக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பெற்றோர் தன் காதல் திருமணத்தை ஏற்கவில்லையே என நினைத்து சந்தோஷ்குமார் சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், தனது மனைவி கோயிலுக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது காதல் கணவரை இழந்துவிட்ட மீனா கதறி அழுதுள்ளார். இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.