போலி டாக்டர் மருத்துவம் பார்த்ததில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் கிராம மக்கள்!!

127

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தவர் தேவராஜ் (29). இவர் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், விடுமுறைக்கு வந்த பிரபாகரன் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்திருந்த தேவராஜ் என்பவரிடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு தேவராஜ் சிகிச்சை அளித்துள்ளார். அதனையடுத்து சிகிச்சை பெற்ற பிரபாகரன் இரவு வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உறவினர்கள் பிரபாகரனை வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு அவரை பரிசோதித மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து மருத்துவம் பார்த்த தேவராஜ் என்பவரை கைது செய்த வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவராஜ் மருத்துவம் படிக்கமால் போலி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை, மருந்து உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அவரை நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.