சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி : நடந்த விபரீதம்!!

173

ள்ளி மாணவிக்கு..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சாமிகும்பிடுவதற்காக கோயிலுக்கு வந்த போது அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கோயிலில் அடைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,

கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.