திருமணம் செய்வதாக கூறி கைவிட்ட காதலன் : அதே நாளில் வேறு நபரை மணந்த காதலி!!

1129

இந்தியாவில் ஏற்கனவே திருமணமான நபர் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பிரிந்த நிலையில், குறித்த பெண் காவலரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரிப்பிள் வனியா (24). தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவருக்கு மகேஷ் ரத்தோட் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் இதை அவர் ரிப்பிளிடமிருந்து மறைத்துள்ளார். ஆனால் மனைவியை சில மாதங்களாக பிரிந்து மகேஷ் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டார் எதிர்ப்பை மீறி மகேஷை திருமணம் செய்து கொள்ள ரிப்பிள் அவர் இடத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் இது குறித்த தகவல் மகேஷின் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசாரிடம் அவர் புகார் கொடுக்க ரிப்பிளையும், மகேஷையும் காவல் நிலையத்துக்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு கொடுக்க்கப்பட்ட கவுன்சிலிங்கை அடுத்து, தனது மனைவியுடன் சென்று வாழ விரும்புவதாக மகேஷ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விடயம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறிய ரிப்பிள் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பொலிசாரை அதிர வைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால் பொலிசார் அந்த சூழலில் அதிரடி முடிவை எடுத்தனர்.

அதன்படி அங்கு பணிபுரியும் ஜாஸ்மட் சோலாங்கி (28) என்ற காவலரை ரிப்பிளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தனர்.

ஜாஸ்மட் மிகவும் நேர்மையான காவலர், அவரை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என ரிப்பிளுக்கு புரிய வைத்தனர்.

இதையடுத்து திருமணத்துக்கு முழு மனதோடு சம்மதித்த ரிப்பிள், ஜாஸ்மட்டை அங்கேயே பொலிசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தம்பதியை பொலிசார் உயர் அதிகாரிகள் வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.