ஒரு நாள் ஒருவேளை மட்டும் இப்படி சாப்பிடுங்க…. தொப்பை மின்னல் வேகத்தில் குறைந்திடுமாம்!

845

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் OMAD டயட்டை பின்பற்றுங்கள். என்ன புரிய வில்லையா? OMAD என்பது ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட் ஆகும். இந்த டயட்டின் படி ஒருவர் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல், ஒரு மணிநேரம் மட்டும் எவ்வித தடையும் இல்லாமல் சாப்பிடலாம்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் விரதம் இருப்பதன் விளைவு குறித்து சோதனை செய்தார்கள். அதில் விரதம் இருந்ததில், மனிதர்களின் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவும், ஆரோக்கியமும் அதிகரிப்பதோடு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால், அதன் விளைவாக உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இக்கட்டுரையில் ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட் மேற்கொள்ளும் போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என அனைத்து விஷயங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட்

இந்த டயட்டின் பேரின் படி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இதனால் நாள் முழுவதும் எடுக்கும் கலோரிகளின் அளவு குறையும் .