பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு லாரி ஓட்டுநரால் அரங்கேறிய கொடுமை!!

245

வானூர்…

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்,  இவர் வயது 26. இவர் அப்பகுதியில் வேன் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பாண்டியன் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் பாண்டியன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து பாண்டியனை சிறையில் அடைத்தனர்

8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வேன் ஓட்டுநரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் நோக்கத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று வருட தண்டை அல்லது அதிகபட்சம் 5 வருடம் வரை தண்டை கொடுக்கும். மேலும், அபராதமும் விதிக்கப்படலாம்.