நள்ளிரவு பூஜையில் நடந்தது என்ன? உயிர் பிரியும் நேரத்தில் சாமியாரை கை காட்டிய மாணவி!!

553

திருவள்ளூர்…..

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.

ராமச்சந்திர ரெட்டியார் மறைந்த பிறகு அந்த இடத்தில் ஆசிரமத்தை கட்டி முனுசாமி நடத்தி வந்துள்ளார். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து முனுசாமியின் தோட்டத்தில் வேலை, கோயில் வேலை, முனுசாமியின் கை, கால் அமுக்கிவிடும் வேலையும் செய்து வந்துள்ளார்கள்.

இந்த ஆசிரமத்தில்தான் மாணவி ஹேமமாலினி தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் மாவட்டம் சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் – நிர்மலா தம்பதியின் மூத்த மகள் ஹேமமாலினி (20).

இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக எங்கையோ சொன்னதன் அடிப்படையில் முனுசாமியிடம் குறிகேட்க கடந்த ஆண்டு வந்துள்ளனர்.

அப்போது முனுசாமி ஹேமமாலினிக்கு தோஷம் இருப்பதாகவும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் என்னுடனே தங்கி பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இரவு நேர பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் தெரிவித்துளளார்.

இதனிடையே, கல்லூரிக்கு சென்று வந்த ஹேமமாலினியை அடிக்கடி ஆசிரமத்துக்கு அழைத்து வந்து பூஜையில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி முனுசாமி கேட்டுக்கொண்டதன் பேரில் ஹேமமாலியை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பூஜை முடிந்த பிறகு அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு கோயிலில் உறங்க சென்றுள்ளனர். அப்போது, ஹேமமாலினியை மட்டும் தனது வீட்டு அறையில் தூங்கும்படி சாமியார் முனுசாமி கேட்டுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் என நினைத்த உறவினர்கள் ஹேமமாலினியை அவரது தங்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை ஹேமமாலினி வாந்தி எடுத்துவிட்டு மூச்சி பேச்சின்றி மயங்கி விழுந்துள்ளார். உடனே, சாமியாரின் மனைவி உறவினர்களிடம் ஓடி வந்து, ஹேமமாலினி பூச்சி மருந்தை குடிச்சிட்டதாக தெரிவித்துள்ளார். பதறி அடித்து சென்ற உறவினர்கள் முனுசாமியிடம் ஆம்புலன்சுக்கு போன் செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் , முனுசாமி அதை காதில் வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். என்ன நடந்தது என்று உறவினர்கள் ஹேமமாலினியிடம் கேட்டபோது, அவர் முனுசாமியை கை காட்டியுள்ளார். அப்போது, ஹேமமாலினியின் தலையை முனுசாமி இழுத்து பிடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இரண்டு நேரம் கழித்து ஆட்டோ ரிக்ஷவை வரவழைத்து மாணவியை வெங்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார் முனுசாமி. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த இறந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய சாமியார் முனுசாமியை கைது செய்து இப்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி எதனால் விஷம் சாப்பிட்டார்? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மகளை ஒரு சாமியாரின் கட்டுப்பாட்டில் விட பெற்றோர் எப்படி சம்மதித்தனர்? மாணவி உயிருக்காக போராடிய போது அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முனுசாமி ஏன் முயற்சி செய்யவில்லை? ஆகிய பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில் திருவள்ளூர் டிஎஸ்பி சாரதி விசாரணை நடத்தி வருகிறார்.