இன்றைய ராசிபலன் (25-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

728

இன்றைய ராசிபலன்…..

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களுடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாற்றம் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் அரவணைப்பு இருக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்என்பதை கண்டறிவீர்கள். நட்பால்ஆதாயம் உண்டு. நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்த்தவை சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரர் உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் உடனே முடியும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை களுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மனோபலம் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.‌ உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சாதிக்கும் நாள்.