இப்படி ஒரு திருமணமா? பலரையும் வியப்பில் ஆழ்த்திய தமிழர்கள்

975

தமிழ்நாட்டில் கிராமிய மணம் கமழும் வகையில் நடைபெற்ற திருமணம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.திருப்பூரில் நடைபெற்ற இத்திருமணம் ரசாயனப் பூச்சிக் கொல்லியற்ற காய்கறிகளுடன் கல்யாண சமையல், சுற்றுச் சூழலைக் கெடுக்காத தட்டு, குவளைகள், சீதனமாய் காங்கேயம் பசுவும்- கன்றும் என தமிழர்களின் பாரம்பரிய கிராமிய மணத்தோடு களைக்கட்டியது.

கிராமிய முறைத் திருமணத்துக்காக நிச்சயதார்த்தத்தின் போதே திட்டமிட்டனர் மணமக்கள் லோகேஸ்வரன்- கீதாஞ்சலி தம்பதியின் பெற்றோர்.

பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டாலும், தங்களது சொந்த நிலத்தில் திருமணத்துக்கு தேவையான காய்கறிகளை முற்றிலும் இயற்கையான முறையில் தாங்களே விளைவித்தனர்.

விருந்தினர்களுக்கு குடிநீராகவும், சமைக்கவும் சுத்திகரிக்கப்பட்ட மழை நீரே வழங்கப்பட்டுள்ளது.முற்றிலும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்ட இந்த திருமணத்தில் சில்வர், செம்பு பாத்திரங்கள், மக்காசோள தட்டுகளுமே உணவு பரிமாறப் பயன்படுத்தப்பட்டது.

இது போன்ற திருமணங்கள் பாரம்பரியம் மற்றும் இயற்கை பொருட்களின் மகத்துவத்தை உணர்த்துவதாக பலரும் பாராட்டியுள்ளனர்.