மூட்டு பிரச்சனைகள் தீர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

649

நமது உடலில் கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படும் மூட்டு பிரச்சனைகளை தீர்க்க, லைசின் என்னும் அமினோ அமிலச்சத்து மிகவும் அவசியம் ஆகும்.

அமினோ அமிலத்தினை உணவுப் பொருட்களில் இருந்தே நாம் பெற முடியும். லைசின், ஒருவரது மனஅழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றையும் குறைக்கும்.

இந்த லைசின் அமினோ அமிலத்தினை எந்தெந்த உணவுகளில் இருந்து பெறலாம் என்பதை இங்கு காண்போம்.

பர்மேஸன் சீஸ்

புரோட்டீன் அதிகம் நிறைந்த பால் பொருட்களுள் ஒன்றான பர்மேஸன் சீஸில், ஒரு நாளைக்கு தேவையான 151 சதவித அளவு லைசின் உள்ளது. எனவே, இதனை அடிக்கடி உண்டு வர வேண்டும்.

மாட்டிறைச்சி

வறுத்த மாட்டிறைச்சியில் 171 சதவித அளவில் லைசின் உள்ளது. இது அதிக சுவையுடனும், புரோட்டீன் நிறைந்ததும் ஆகும். அத்துடன் பல்வேறு அமினோ அமிலங்களும் இதில் அடங்கியுள்ளன.

கோழி நெஞ்சுக்கறி

வேக வைத்த கோழி நெஞ்சுக்கறியில் ஏராளமான அளவில் புரோட்டீன்கள் உள்ளன. அத்துடன் 148 சதவித அளவில் லைசினும் உள்ளதால் இதனை உட்கொள்ளலாம்.

சூரை மீன்

மீன்களின் பொதுவாக லைசின் இருக்கும். ஆனால், சூரை மீன்களில் இதன் அளவு மிக அதிகமாகவே இருக்கும். 123 சதவித அளவில் சூரை மீனில் லைசின் உள்ளது.

வறுத்த சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுள் ஒன்றாகும். இதில் 125 சதவித அளவில் லைசின் அடங்கியுள்ளது. மேலும், பெரும்பாலான அமினோ அமிலங்களும், தாவர வகை புரோட்டீன்களும் இதில் நிறைந்துள்ளன.

பன்றி இறைச்சி

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான பன்றி இறைச்சியில், மிருக வகை புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. மேலும், 131 சதவிதத்தில் லைசினும் அடங்கியுள்ளது.

இறால்

கடல் உணவுகளான இறால், நண்டு போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது. குறிப்பாக, சமைத்த இறாலில் 103 சதவிதத்தில் லைசினும், அத்தியாவசிய அமினோ அமிலங்களும் அதிகளவில் உள்ளன.

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன், பழ வகை புரோட்டீன்களும் உள்ளன. 67 சதவித அளவில் இவற்றில் லைசின் உள்ளதால், அவ்வப்போது ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடலாம்.

பச்சை முட்டை

அனைவருக்கும் விருப்பமான உணவான பச்சை முட்டையை, உடற்பயிற்சிக்கு பின் உட்கொள்வது மிகவும் நல்லது. புரோட்டீன்கள் நிறைந்த முட்டையில், லைசினும் 43 சதவிதத்தில் உள்ளது.

வெள்ளை காராமணி

சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருளான காராமணியில், 32 சதவிதம் லைசின் உள்ளது. அதுவும் வெள்ளை காராமணியில் ஏராளமான அமினோ அமில சத்துக்கள் உள்ளன.

பக்க விளைவுகள்

லைசின் அமினோ அமில உணவுகளில் நன்மைகள் இருப்பது போல் சில வகை பக்கவிளைவுகளும் உள்ளன.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் லைசின் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

லைசினுக்கும் சிறுநீரக நோய்களுக்கும் தொடர்புள்ளதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே, சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் லைசின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.