இன்றைய ராசிபலன் (09-04-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

984

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினரின் வருகையால் வீடு, களைகட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

சந்திரன் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசவேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சிம்மம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர் கள். வெளிவட்டாரத்தில் செல் வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நவீன உத்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

கன்னி

உங்களின் நீண்ட நாள் ஆசை யில் ஒன்று நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத் ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரச்னைகளுக்கு எதார்த்தமாக முடிவு எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லா வற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளை கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர் களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.கனவு நனவாகும் நாள்.

மீனம்

எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆதரவு கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதி கரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தி யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.