90களில் கலக்கிய நடிகை வினோதினிக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு இழப்பா- ஒரு சோகமான தகவல்

731

90களில் சினிமாவில் கலக்கிய சில நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரிவது இல்லை. ஒருசில நடிகைகள் இப்போதும் திரைப்படங்கள், சீரியல்கள் என பிஸியாக நடித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்கள் நடித்து திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவேளை விட்டவர் நடிகை வினோதினி.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும், வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்துக் கொள்வதில் எனக்கு ஆனந்தம், சினிமாவில் நடிக்க முடியவில்லையே என்று வருத்தம் இல்லை.

குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன், ஆனால் என்னுடைய வாழ்வில் ஒரே ஒரு சோகம் தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த என் அக்காவை 2 வருடம் கூடவே வைத்து பார்த்துக் கொண்டேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவரின் மறைவு இன்றும் எனக்கு பெரிய இழப்பு என கூறியுள்ளார்.