இன்றைய ராசிபலன் (19-04-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

647

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர் நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எளிதில் யாரையும் நம்பாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நன்மைகள் நடக்கும் நாள்.

கடகம்

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள் அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய காரியங்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: எதார்த்தமாக பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் அவர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.