ரொட்டியை கருக்கிய மனைவி: திருமணமாகி ஒரு வருடத்துக்குள் விவாகரத்து வழங்கிய கணவன்

86

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்ததோடு, இதுபற்றி சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடைக்கு சட்டம் இயற்றும் பொருட்டு, ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இந்த மசோதாவில் விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் முஸ்லீம் ஆண்கள் தலாக் கூறி விவாகரத்து செய்வதை நிறுத்தவில்லை.

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 24 வயது பராக் என்ற இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இதில், ரொட்டி சுட்ட பராக், ரொட்டிய கக்கியுள்ளார். இதனால் கோபம் கொண்ட கணவர் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் புகார் அளித்துள்ளதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.