காமுகனிடம் சிக்கிய இளம்பெண்… சினிமா பாணியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பொலிஸார்

114

மத்திய பிரதேசத்தில் 15 நாட்களாக வீட்டில் கடத்தி வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணை, வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு காவல்துறை மீட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே Bhanpur கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 20-ம் தேதி தனது வீட்டின் அருகே உலாத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த Rehan (30) என்பவர் தன்னுடன் வெளியில் வருமாறு கூறியுள்ளார்.

Rehan தனக்கு 6 மாதங்கள் தெரிந்த ஒருவனாக இருந்தாலும், சம்மந்தப்பட்ட இளம்பெண் அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிய Rehan, Samta Colony பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து கடந்த 15 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்த பொலிஸார், கடந்த 4-ம் தேதியன்று சினிமா பாணியில் இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு மீட்டுள்ளனர். இதனையடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளி Rehan மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.