தலைமுடி பறந்து வந்ததால் பெண்ணின் தலையை வெட்டிய கொடூர சம்பவம்

216

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமுடி பறந்து வந்ததால், பெண்ணின் தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கூடலூர் கிராமத்தில் பிரியா என்ற பெண்ணிற்கும், நாகரத்தினம் என்பவருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பிரியாவை பழிவாங்க எண்ணிய நாகரத்தினம், பிரியாவின் தலைமுடி பறந்து வருவதை காரணமாக கூறி, இனி தலைமுடி என் வீட்டிற்கு வந்தால், தலையை வெட்டிவிடுவேன் என கூறியுள்ளார்.

இதில் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, நாகரத்தினம், கத்தியை எடுத்து பிரியாவின் தலையில் வெட்டியுள்ளார்.பலத்த காயமடைந்த பிரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.