காவல் நிலையத்திற்கு முன்பாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்!!

88

ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த பெண்ணை வெட்டி கொலை செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் அருகில் உள்ள ராணிப்பேட்டை செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா (45) என்பவர் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வெளியே வரும்போது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த சுகுனவை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக தெரிய வருகிறது.

அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் விழுந்து சுகுணா உயிர் இழந்தார். இவர் கணவனை இழந்தவர். இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சுகுணாவிற்கும் சுரேந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் நேற்று மாலை குடித்து விட்டு சுகுணா வீட்டிற்கு சென்ற சுரேந்திரன் சுகுணாவோடு வாக்குவாதம் செய்ததாகவும் அதன்பின்னர் சுகுணாவை செங்கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து 1000 ரூபாயை எடுத்து கொண்டு போனதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாகத்தான் சுகுணா புகார் அளிக்க காவல் நிலையம் வந்திருக்கிறார். இதனை அறிந்த சுரேந்திரன் ஆத்திரம் தாங்காமல் அவரது செய்கையை பின்தொடர்ந்து வந்த சுரேந்திரன் இந்த கொலை செயலை செய்து விட்டு தப்பி இருப்பதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் தலைமறைவான சுரேந்திரனை தேடி வருகின்றனர்.