பிளாஸ்டிக் சர்ஜரியால் பலியான சீரியல் நடிகை : அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!!

260

சேத்தனா ராஜ்….

கன்னட சின்னத்திரையில் நடிகையாக வளம் வந்தவர் 21 வயதே ஆன சேத்தனா ராஜ். இவர் அவரது பெற்றோருக்கு தெரியாமல் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார் என பெங்களூரு போலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள போலிஸார், ‘கீதா’, ‘தொரேசானி’, ‘ஒளவினா நில்டானா’ போன்ற பிரபல சீரியல்களில் நடித்தவர் சேத்தனா ராஜ். ‘ஹவயாமி’ என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். பெங்களூருவின் அபிகெரே பகுதியைச் சேர்ந்தவர் சேத்தனா ராஜ். இளம் நடிகையான சேத்தன் ராஜ் பிளாஸ்டிக் சர்ஜரியின் போது உயிரிழந்திருக்கிறார்.

இறந்த நடிகையின் பெற்றோர் மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாடியுள்ளார். எந்த வித முறையான உபகரணங்களும் இல்லாமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் புகாரில் கூறியிருக்கிறார்கள்.

நேற்று (மே 16) காலை 8.30 மணியளவில் கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேத்தனா ராஜ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அப்போதுதான் எங்களுக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே தெரிய வந்தது. முன்பே கேட்டபோது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டாம் என சேத்தனாவிடம் கூறியிருந்தோம். ஆனாலும் அவர் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து சென்ற போது சிகிச்சை தொடங்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அன்றைய தினமே மாலை சேத்தனாவின் நுரையீரலில் தண்ணீரோ கொழுப்போ சேர்ந்ததால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.

இதற்கு முழுமுதற் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான். பெற்றோரின் அனுமதியின்றி சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள் என சேத்தனாவின் தந்தை கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவமனை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே அறுவை சிகிச்சையின் போது அவரது நுரையீரலில் தண்ணீர் படிந்ததால் மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது” இவ்வாறு போலிஸார் கூறியிருக்கிறார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட இளம் நடிகை மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.