இடுப்பு பகுதி கருமையாக உள்ளதா? இதை செய்தால் பலன் கிடைக்கும்

841

இறுக்கமாக உள்ளாடை அணிவதால் அப்பகுதி கருமையாகுவதுடன், புண், தழும்பு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இதனை உடனடியாக போக்கி எளிதில் தீர்வு பெறுவதற்கு சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

இடுப்பு பகுதி கருமையை போக்க என்ன செய்யலாம்?

குளிக்கும் முன், 1 ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவ வேண்டும்.
பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கலாம்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
1 எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்க வேண்டும்.
2 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் கடலை மாவு கலந்து பேக் போட்டு அது காய்ந்தவுடன் கழுவி, மாய்ஸ்ச்சரைஸரை தடவி வந்தால் விரைவில் கருமை மறையும்.