கால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம் : எச்சரிக்கை தகவல்!!

651

பிரித்தானியாவை சேர்ந்த பெண் கால்முடியை ஷேவ் செய்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஒரு காலை இழந்துள்ளார்.

தன்யா கிரெர்னோஸ்கோ (43) என்ற பெண் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வலது கால் முடியை ஷேவ் செய்த போது அவருக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டது.இதை தன்யா பெரிதுப்படுத்தாமல் இருந்த நிலையில் சில வாரங்கள் கழித்து காயம் பெரிதாகியுள்ளது.

இதையடுத்து மருத்துமனைக்கு தன்யா சென்ற நிலையில் காலில் அல்சர் ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்து ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளை கொடுத்துள்ளனர்.ஆனாலும் காலில் உள்ள காயம் இன்னும் பெரிதாகி சீழ்பிடிக்க தொடங்கியுள்ளது.

அப்போது தன்யாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது.ஆனால் கிருமியானது கால் முழுவதும் பரவியதால் அவரின் கால்களை வெட்டி எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து கடந்த 2016-ல் தன்யாவின் வலது கால் வெட்டியெடுக்கப்பட்டது.காலை எடுக்கவில்லை என்றால் காயம் இன்னும் பெரிதாகி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பல மாத சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிய தன்யா ஒற்றை காலுடன் வாழ்ந்து வருகிறார்.எந்தவொரு சிறிய காயம் என்றாலும் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என தன்யா மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.