பின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்!

614

பிரேசிலில் பின்னழகை பெரிதாக்க மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண் பலியானதால் மருத்துவர் தலைமறைவாகியுள்ளார்.பொதுவாக பெண்கள், தங்களது உடல் அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வழக்கம்.

இந்நிலையில், பிரேசிலை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டேனிஸ் பர்டாடோ இந்த சர்ஜரியில் சிறந்து விளங்கியதால், அவரது கையால் சிகிச்சை பெற பல பெண்கள் வரிசையில் காத்திருப்பார்கள். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் டேனிஸ்க்கு ரசிக கூட்டம் அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து, 46 வயதுடைய பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்க மருத்துவர் டெனிஸிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அப்போது, அந்த பெண்ணிற்கு மருத்துவர் டேனிஸ் பின்னழகை பெரிதாக்க அறுவை சிகிச்சை ஊசி போட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அந்த பெண் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, டாக்டர் டேனிஸ் ஊரை விட்டு தப்பி ஓடிவிட்டார்.அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த செய்தி அவரது கையால் சிகிச்சை பெற காத்திருந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.