Vote List-ல் ஐஸ்வர்யா முன்னிலையில் இருந்தது எப்படி?… இதோ வெளியான ரகசியம்!!

850

ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடுமையான போட்டியை சமாளித்து வரும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீசன் 2வில் பார்வையாளர்களின் அதிக வெறுப்பினை சம்பாதித்தவர் என்றால் அது ஐஸ்வர்யாவே தான். ஆனாலும் அவர் இன்னும் வெளியேறவில்லை என்ற சோகம் மக்களிடையே இருந்து வருகிறது.

பாலாஜியின் மீது குப்பைக் கொட்டிய வாரத்திலிருந்து இன்று வரை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே காணப்படுகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு மக்களின் ஓட்டு அதிகமாகவே உள்ளது என்று கமல் கூறியது அனைவரும் அறிந்ததே.

தற்போது அவ்வளவு அதிகமாக வாக்குகள் ஐஸ்வர்யாவிற்கு மும்பையில் இருக்கும் ரசிகர்களால் தான் போடப்படுகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்ட ஒரு பக்கத்திலிருந்து ஐஸ்வர்யாவிற்கு அளவுக்கதிகமான ஆதரவு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.