அஜித்பட வில்லனின் ஆச்சரிய செயல்- பலபேர் இவரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்

765

அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்தவர் கபிர் துஹான் சிங். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் அப்படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் அடுத்து அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இதனை மறுத்து கபிர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இங்கே தான் அவர் செய்த ஆச்சிரியமான விஷயத்தை பார்க்க வேண்டும். இந்த பதிவை அவர் ஆங்கிலத்திலேயே பதிவிட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தமிழில் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் அழகாக பதிவிட்டிருக்கிறார்.

பலபேர் தமிழகத்தில் பிறந்து தான் தமிழன் என்பதையே வெளிக்காட்ட அசிங்கப்படும் நிலையில் இவரது இந்த செயலை அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என பலர் ஆவேசமாக கூறி வருகின்றனர்.