அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை செருப்பால அடிப்பேன்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி ஓபன் டாக்!!

244

சனம் ஷெட்டி..

தமிழில் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி. இதனை அடுத்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாடன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் சனம் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதன் பின்னர் இவர்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சனம்,

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் தலைவிரித்து ஆடுவதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதை வெளியிட்ட ஹேமா மேடமுக்கும் அந்த குழுவிற்கும் என்னுடைய நன்றிகள்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது மலையாள சினிமாவில் மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் இருக்கிறது. அந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை, அந்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் டா நாயே என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால் சினிமாவில் இருக்கும் அனைவரும் அப்படிபட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. நல்லவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சனம் தெரிவித்துள்ளார்.