விஷால் பதில்
பிரபல திரைப்பட நடிகையான அமலாபாலுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்த போது தான் பக்கபலமாக இருந்தேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான விஷால் இன்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர்.
அதில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, சின்மயி கூறிய புகார் நிரூபிக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும். அதுமட்டுமின்றி சின்மயி விவகாரத்தில் அவர் உடனடியாக சொல்லி இருக்க வேண்டும் யாருக்காகவும் சின்மயி அச்சப்பட்டிருக்க கூடாது.
METOO விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். நடிகையான அமலாபாலுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்த போது, தான் அவருக்கு பக்கபலமாக இருந்தேன்.இதனால் நடிகைகள் பிரச்சனைகளை விரைவாக வெளியே சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.