கடும் கோபத்தில் நடிகை
சினிமா துறை பிரபலங்கள் பற்றிய விஷயங்கள் வெளியாகின்றது என்றால் அது பெரும்பாலும் அவர்களிடம் பணியாற்றுபவர்கள் அல்லது நண்பர்கள் மூலமாகத்தான் இருக்கும்.
அப்படி தன் சொந்த விஷயத்தை லீக் செய்த டிரைவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் தற்போது 13 வயது குறைந்த அர்ஜுன் கபூர் என்ற நடிகரை காதலித்து வருகிறார். திருமணமும் விரைவில் நடக்கவுள்ளது.
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க ஒரு வீட்டை வாங்குவதற்காக தேடிக்கொண்டிருக்கிறாராம் நடிகை. அது பற்றிய தகவலை அவரின் டிரைவர் தன் தம்பியிடம் கூறியுள்ளார். அவரின் தம்பி நடிகர் அர்பாஸ் கானிடம் டிரைவராக பணியாற்றுகிறார்.
அவர் மூலம் இந்த தகவல் மலைக்கா அரோராவின் முதல் கணவர் அர்பாஸ் கானுக்கு சென்றுள்ளது. இதனால் கடும் கோபத்தில் இருந்த நடிகை. டிரைவரை திட்டி தீர்த்துவிட்டாராம்.