புத்தம் புது காலை…
ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது.
ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை’ ‘அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் இந்த படம் October 16 வெளியாக உள்ளது.
மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.