அய்யோ என் வாழ்க்கை போச்சே… வெளிநாட்டுக்கு சென்ற கணவருக்கு நேர்ந்த கதி : கதறும் மனைவி!!

1425

கதறும் மனைவி

போலந்து நாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு தான் தங்கியிருந்த சக அறை நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (25). இவரின் மனைவி கலைச்செல்வி (23). இவர்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

நான்கு வயதில் தரீக் என்கிற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள ஐஸ்க்ரீம் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஏஜென்சி மூலம் வெங்கடேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர், விடுதி அறையில் நான்கு பேருடன் தங்கியிருந்து ஐஸ்க்ரீம் கம்பெனியில் வேலை பார்த்தார்.

இந்நிலையில், ஏஜென்சியில் இருந்து கலைச்செல்விக்கு போன் வந்தது. உன் கணவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க முயன்ற வெங்கடேஷை அறை நண்பர்கள் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டனர் என கூறியுள்ளனர்.

வெளியுறவுத்துறை மூலம் வெங்கடேஷின் உடலை மீட்டு எங்களிடம் ஒப்படையுங்கள். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேளுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் கலைச்செல்வி மனு அளித்துள்ளார்.

மனு கொடுத்த பிறகு, வெங்கடேஷின் மனைவி ‘என் வாழ்க்கையே போச்சே…’ என்று கதறி அழுதபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதைப் பார்த்தவர்கள் கண் கலங்கினர்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் உடனடியாக டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் போலந்து தூதரகம் மூலம் வெங்கடேசன் உடலை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் போலந்து நாட்டின் தூதரகமும் இறந்தவர் குறித்த தகவல்களை மத்திய வெளியுறவுத்துறையிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே, 5 நாட்களில் வெங்கடேசனின் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.