அரைநிர்வாணமாக வாட்ஸ்அப் காலில் மாணவிகளிடம் பேசிய விடுதி உரிமையாளர் மரணம் : தொடரும் மர்மம்!!

840

கோயம்புத்தூரில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

பீளமேடு பகுதியில் தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் என 200 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்த விடுதியில் காப்பளராக இருந்த புனிதா என்பவர், பிறந்தநாள் விழா எனக்கூறி சில மாணவிகளை இரவு வெளியில் அழைத்து சென்று, மதுவிருந்து வைத்துள்ளார். இந்த தகவல்கள் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, விடுதியை முற்றுகையிட்டனர்.

ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் விடுதிக்குள் சென்று அங்கு தங்கி இருந்த மாணவிகளை நேரில் சந்தித்து பேசினர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை காப்பாளர் புனிதா தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப் காலில் விடுதியின் உரிமையாளர் ஜெகதீசன் அரை நிர்வாணமாக லைனில் இருக்கும் போது அவரிடம் பேச சொல்லி மாணவிகளை வற்புறுத்தியதாகவும், கட்டிட உரிமையாளர் ஜெகநாதன் பிறந்தநாள் பார்டிக்கு மது அருந்த சொல்லி வற்புறுத்தியதும் தெரியவந்த தாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், புனிதா தலைமறைவாகிவிட்ட நிலையில், மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட விடுதி காப்பாளர் ஜெகன்நாதனை தேடி வந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.