அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளேன்: அர்னால்டின் ‘Thumbs up’ புகைப்படம்…!!

449

நடிகர் அர்னார்ட்…

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே போன்ற படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகர் அர்னார்ட் ஸ்வார்ஸ்நேகர். பாடி பில்டிங்கில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அறுவை சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக, கையை உயர்த்தி காட்டும் ‘Thumbs Up’ புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.