அழகிய மகளின் பிறந்தநாளை மரண நாளாக மாற்றிய தந்தை! சந்தேகத்தால் கோடாறியால் அடித்துக்கொலை!!

1077

ஆந்திராவில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மகளை கோடாறியால் அடித்து கொலை செய்து தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Chandarlapadu கிராமத்தை சேர்ந்த சந்திரிகா என்பவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்றுதான் தனது 18 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சந்திரிகா, தனது செல்போனில் ஆண் நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார்.

மேலும், அவரது செல்போனிலும் ஆண் நபர் ஒருவரின் புகைப்படம் இருந்துள்ளது. இதனைப்பார்த்த தந்தை, எதனையும் தனது மகளிடம் விசாரிக்காமல் தனது மகள் வேறு ஒரு ஆணுடன தொடர்பில் இருக்கிறார் என சந்தேகம் கொண்டு கோடாறியை எடுத்து மகளின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.