அவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி : திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த ஆச்சரியம்!!

313

தம்பதி..

கனடாவில் தங்களுக்கு அதிர்ஷ்டமே வராது என அவநம்பிக்கையுடன் இருந்த தம்பதி மிகப்பெரிய பரிசு தொகையை லொட்டரியில் வென்றுள்ளனர்.

St. John’s நகரை சேர்ந்த தம்பதி Nicole Parsons மற்றும் Francois-Xavier. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் தம்பதிக்கு இருந்தது. ஆனால் அவர்களுக்கு எப்போதும் பெரிதாக பரிசு விழுந்ததில்லை. இந்த நிலையில் Lotto 6/49 லொட்டரி டிக்கெட்டை இருவரும் வாங்கினார்கள்.

அதன் முடிவுகள் வந்த போதும் இருவரும் சென்று உடனே பார்க்கவில்லை, ஏனெனில் தங்களுக்கு நல்லதே நடக்காது, அதிர்ஷ்டமே கிடையாது என்ற அவநம்பிக்கையில் இருந்தனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் கடைக்கு சென்று பார்த்த போது நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் Nicole Parsons மற்றும் Francois-Xavierக்கு லொட்டரியில் $18.2 மில்லியன் பரிசு விழுந்து அவர்கள் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பரிசு விழுந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை. இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம், வேலை தேவைப்படுபவர்களுக்கு இந்த பணி கிடைக்கட்டும்.

பரிசு பணத்தை வைத்து குடும்பத்தை கவனித்து கொள்வதோடு Quebec நகரில் வீடு வாங்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.