அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்: கதறிய தனுஷ் பட நடிகை!!

585

திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சுவரா பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

இது குறித்து பல நடிகைகள் மனம் திறந்து பேச ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தனுசுடன் ராஞ்சனா இந்தி படத்தில் நடித்த சுவரா பாஸ்கரும் தனக்கு தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக புகார் கூறியுள்ளார்.

ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வந்தது.சுவரா கூறுகையில், பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார், நான் அதை அனுமதிக்கவில்லை.

ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். நடிகைகள் விருப்பம் என்ன என்பதை கேட்ட பிறகே அவர்களை அணுக வேண்டாம். விருப்பம் இல்லாதவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறியுள்ளார்.