நடிகர் சித்தார்த்
பிரபல இயக்குனரான சுசி கணேசன், தன் அப்பாவை மிரட்டியுள்ளதாகவும், இதற்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் எனவும் நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டிற்கு நடிகர் சித்தார்த் ஆதரவு தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் பெண் இயக்குனரான லீனா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேஷன் தன்னை காருக்குள் வைத்து பாலியல் தொந்தரவு தந்ததாக கூறினார்.
ஆனால் இதற்கு சுசி கணேசன் மறுப்பு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி லீனா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
#metoo சுசி கணேசன் என் மேல் கிரிமினல் கேஸ் போட்டிருப்பதாக மீடியாவில் flash செய்கிறார். முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். நோட்டீஸ் வரட்டும். Let me then quash it. இவனை மாதிரி பொய்யர்களோடல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும் தான் எனக்கும் பிடிக்கும்.
இதற்கிடையில் நடிகர் சித்தார்த், லீனாவுக்கு ஆதரவாக நிற்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த சுசி கணேசேன் உடனடியாக சித்தார்த்தின் வீட்டு எண்ணுக்கு போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அவரின் தந்தை போனை எடுத்த போது மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இதை அறிந்த சித்தார்த் அப்பாவை மிரட்டுவதால் நான் பயந்துவிடமாட்டேன். என் சகோதரி லீனாவுக்கு என் ஆதரவு குரல் எப்போதும் இருக்கும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து லீனா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுசி கணேசன் என் மேல் கிரிமினல் கேஸ் போட்டிருப்பதாக மீடியாவில் flash செய்கிறார்.
முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். நோட்டீஸ் வரட்டும். Let me then quash it. இவனை மாதிரி பொய்யர்களோடல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும் தான் எனக்கும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.