ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய விஜே நக்‌ஷத்ரா நாகேஷ்!!

257

நக்‌ஷத்ரா நாகேஷ்..

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாக பல சேனல்களில் பணியாற்றி பிரபலமானவர் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தும் ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பின் சன் சிங்கர், ராணி மகாராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானார். சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த நக்‌ஷத்ரா,

பல விருது நிகழ்ச்சிகளையும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2022ல் ராகவ் என்பவருடன் நிச்சய்ம் செய்து அதே ஆண்டில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் ஒல்லியாக இருந்து, சீரியல்களில் பணியாற்றி வந்தார்.

தற்போது நக்‌ஷத்ரா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க தங்கத்த என்று புலம்பியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.