இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுஷ்மா சொந்த ஊருக்கு வந்த நிலையில் ஒரு ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இரண்டு நாட்களாக அறையை விட்டு சுஷ்மா வெளியில் வராத நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுஷ்மாவின் அறை கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
சுஷ்மாவின் அருகில் கடிதம் ஒன்று இருந்த நிலையில் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.அதில், என்னை நம்பிய வாடிக்கையாளர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
நான் மன அழுத்ததுக்கு ஆளான நிலையில் அதற்கான மருந்துகள் சாப்பிட்டு வந்தேன், அது எனக்கு தற்காலிக தீர்வை தான் கொடுத்தது.என் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு என் பெற்றோரை கேட்டு கொள்கிறேன் என எழுதியுள்ளார்.சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.